பாசத்துடன் புகாரி.
பாசத்துடன் புகாரி.
வாழ்த்துகள் கவிஞர் புகாரிக்கு
கவிஞர் புகாரி பிறந்த ஊர் தஞ்சை அருகில் உள்ள ஒரத்தநாடு தென்னங்கீற்றைப் போல வாரி வகிடெடுத்த தெருக்கள் ஒரத்தநாட்டிற்குப் பேரழகு. உரந்தை என்று சுருக்கமாக அதன் பெயர் கொஞ்சப்படும். இப்பொழுது கணினி பொறியாளராக கனடாவில் பணியாற்றி வருகிறார் .அவர் எழுதிய கவிதைகள் ஏராளம் . புகாரி அவர்கள் எழுதிய கல்யாணமாம் கல்யாணம் கவிதையை அவரே சொல்வதை கேளுங்கள்
கணித்திரையில் கனவுகளைக் கவிதைகளாக்கிக் கொண்டும் விழித்திரையில் கவிதைகளைக் கனவுகளாக்கிக் கண்டும் கவிஞர் புகாரி தனக்கான சுவாச வெளியில் மிதந்தவராய்....தமிழனாய் வாழ்பவர்.......கவிஞர் புகாரி
கவிஞர் புகாரியின் கவிதைகள் ஆத்மாவின் கருவிலிருந்து உருவானவை. கருத்தழகு, சொல்லழகு, நடையழகு, அணியழகு ஆகிய நயங்கள் படைத்தவை. அன்புடன், முகம்மது அலி ஜின்னா. நீடூர் S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.