Statistics |
Total online: 1 Guests: 1 Users: 0 |
|
Main » 2011 » May » 29 » கவிதைக் களம்
|
சுயதரிசனம்
நீச்சல் ஒரு பயிற்சி நீந்துவதால் உடல் வழுவாகும் ஆனால் ஞானத்தில் மூழ்கினால் உள்ளம் தெளிவாகும்
மனிதர்கள் நீந்தவேண்டும் தன்னை அறிவதற்கு அறிவில் தெளிவதற்கு
பலர் நீந்துகின்றோம் கடக்கும் கப்பலில் விரையும் விமானத்தில் பொருள்தேடி
பொருள் எண்ணத்தை கறைபடுத்துகிறது கறை மனிதர்களை சிறைப்படுத்துகிறது நாம் பொருள் விளங்காமல் பொருள் தேடுகிறோம் தேடல் தரிசிப்பதற்கு நம்மில் நிறைந்த தூய்மையை நேசிப்பதற்கு
நாம் அழுக்கைக் கொண்டு தூய்மையாக நினைக்கிறோம்
அழுக்கு தூய்மையை தரிசிக்க முடியுமா? தூய்மையை நேசிப்பதற்கு தூய்மை வேண்டும்!
இறைவன் தூய்மையானவன்!
-கிளியனூர் இஸ்மத் ஹக்கியுல்காதிரி நன்றி : கவிதைக் களம்
|
Views: 750 |
Added by: nidurali
| Rating: 0.0/0 |
|
|
|